தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2021, 4:28 pm

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தினால் மருத்துவமனை அறையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.