கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

நாட்டில் தொடா்ந்து 3-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் குறைவான தொற்று பாதிப்பு

நாட்டில் தொடா்ந்து 3 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

News image
Updated On :30 மே 2021, 4:27 am

DIN

நாட்டில் தொடா்ந்து 3 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 21,14,508 -ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தொடா்ந்து தொடா்ந்து 3 நாளாக கரோனா தொற்று 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

17-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,76,309 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,54,54,320-ஆக இன்று பதிவாகியுள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,25,972 ஆக உள்ளது.   

ஞாயிற்றுக்கிழமை காலை அளவிலான 24 மணி நேரத்தில் 20,63,839 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 34,31,83,748 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21,20,66,614 பேருக்கு போடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.