விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தமிழ்நாட்டில் புதிதாக 1624 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,624 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 24 பேர் உயிரிழந்தனர். 

News image

தமிழ்நாட்டில் புதிதாக 1624 பேருக்கு கரோனா தொற்று

Updated On :29 செப்டம்பர் 2021, 2:58 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,624 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 24 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (செப்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,624 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,550-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,09,435-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,51,678பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு...

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 184 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 183 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து...

ஈரோடு - 116
செங்கல்பட்டு - 115
தஞ்சாவூர் - 78
திருப்பூர் - 89
திருவள்ளூர் - 72

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.