தப்பும் தவறுமான ஜே.என்.யு. துணைவேந்தரின் கடிதம்!

தப்புத் தவறுகளுடன் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலை. புதிய  துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் எழுதிய கடிதம் விறுவிறுவெனப் பரவுகிறது...
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பவர் சாந்திஸ்ரீ பண்டிட்.

தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை எழுதி, பத்திரிகைச் செய்தியாகவும் வெளியிட்டிருக்கிறார் அவர்.

புதிய துணைவேந்தரின் இந்தக் கடிதத்தில் எத்தனை பிழைகள் இருக்கின்றன என்பதைப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குத் திருத்துவதைப் போல திருத்தி அவருக்கு பத்துக்கு ஆறு மதிப்பெண்களும் போட்டு சுட்டுரையில் பதிவேற்றியிருக்கிறார் ஒருவர்.

வைரலாகியிருக்கிறது திருத்தி, மதிப்பெண் தரப்பட்ட துணைவேந்தரின் இந்தக் கடிதம்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற புகழுடன், நியமிக்கப்பட்டவுடனேயே, ஏற்கெனவே இவர் பாரதிய ஜனதா ஆதரவாளர், சமூக ஊடகங்களில் ஆதரவுக் கருத்துகளை வெளியிட்டுவந்தவர் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

டிவிட்டரில் தனக்குக் கணக்கு இல்லை, தன்னுடைய கணக்கு இல்லை, தன்னுடைய கணக்கை யாரோ கைப்பற்றிவிட்டனர் என்றெல்லாம் விளக்கம் தந்தார் சாந்திஸ்ரீ பண்டிட்.

இந்தக் கடிதம் விஷயத்திலும், நான் டிக்டெட் செய்தேன், உதவியாளர்கள்தான் அப்படிச் செய்துவிட்டார்கள் என்பதுபோல கருத்துத் தெரிவித்திருக்கிறார் துணைவேந்தர். 

தப்புத் தவறுகளுடனான துணவேந்தரின் இந்தக் கடிதம் இப்போது பரபரப்பாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது, சமூக ஊடகங்களில்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தியும், சாந்திஸ்ரீ பண்டிட் எழுதிய கடிதத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து, எழுத்தறிவின்மையின் கண்காட்சி என்று கடுமையாக விமரிசித்துள்ளார்.

யார் இந்த சாந்திஸ்ரீ பண்டிட்?
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழக அரசியல், பொது நிா்வாகத் துறை பேராசிரியராக சாந்திஸ்ரீ பண்டிட் (59) பணியாற்றி வந்தவர். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான அவா், அங்கு எம்.பில். பட்டம், சா்வதேச உறவுகள் ஆய்வுக்காக பிஎச்.டி. பட்டம் பெற்றவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com