
கோவை: கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயமானதை அடுத்து இரண்டு தனிப் படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன். இவரது 12 வயது மகள் ஸ்ரீநிதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார்.
இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனிப் படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. மேலும் அவருக்கு சக்கரை நோய் இருப்பதாகவும் அதற்கு (மருந்து) ஊசி எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.