அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.முத்தரசன் புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த இபிஎஸ்: ஸ்டாலின் தாக்கு

கடந்த 12 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் கே.அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கே.அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறல் காரணமாக, கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் மாநில பாஜக தலைவருமான கே.அண்ணாமலை மீது கோவை பீளமேடு காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் ஆவாரம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அனுமதியின்றி கூட்டமாகச் சென்றது, பிரசாரத்தில் ஈடுபட்டது, தாக்குதலுக்கு துணையாக இருந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com