டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

38 வயதான தினேஷ் கார்த்திக் தமிழகத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனியால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனதாக சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். நடப்பு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அவர் தற்போது விளையாடி வருகிறார். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். 94 ஒருநாள் போட்டிகளில் 2392 ரன்களும், 26 டெஸ்ட் பொட்டிகளில் 1025 ரன்களும் 60 டி20களில் 686 ரன்களும் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக ஃபினிஷர் ரோலில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி கட்டத்தில் இறங்கும் அவர் எதிரணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் கிலியை ஏற்படுத்தி வருகிறார். இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறலாம் என்கிற தகவல் உலகி வருகிறது. அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் தினேஷ் கார்த்திக் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர என் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் இல்லை. உலகக் கோப்பைக்கு சிறந்த இந்திய அணி எதுவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இருக்கிறார்கள்.

நான் அவர்களுடன் முழுமையாக இருக்கிறேன். அவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன். உலகக் கோப்பைக்கான அந்த விமானத்தில் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com