தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாட்டின்மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாட்டின்மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று சு.வெங்கடேசன், எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 60.96 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.
மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

அடுத்த கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள 94 தொகுதிகளுக்கு வரும் மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.160.61 கோடியும், மக்களவைத் தேர்தல் நடைபெற்றும் வரும் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,498 கோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.276 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம். என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com