நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற இருந்த அந்த கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரத்து
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற இருந்த அந்த கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய கட்சியினருக்கு

பணம் வினியோக செய்ததில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பாஜக தலைமைக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவு வருவதற்குள் கட்சிக்குள் இப்படி தொடர்ந்து புகார் வருவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

இதனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் அதிரடியாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com