பராமரிப்புப் பணி: மதுரை செல்லும் ரயில் சேவையில் மாற்றம்!
மதுரை - ராமநாதபுரம் இடையே பாசஞ்சர் ரயில் ரத்து.


பாராமரிப்புப் பணி காரணமாக மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மதுரை - ராமநாதபுரம் இடையே ஆக. 5,6,8,9,11 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை - ராமநாதபுரம் இடையே ஆக. 5,6,8,9,11 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு - கன்னியாகுமரி இடையே காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆக. 5,8-ல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும். கன்னியாகுமரி - மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆக. 6,9-ல் காலை 6.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11.25 மணிக்கு புறப்படும் மதுரை - புனலூர் ரயில் ஆக. 5,8 தேதிகளில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுவழித்தடத்தில் இயக்கப்படும் புனலூர் - மதுரை ரயில் ஆக. 6,9 தேதிகளில் மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும்.
குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் ஆக. 4,5,8,10 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மதுரை செல்லாமல் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும்.
சென்னை - குருவாயூர் ரயில் ஆக. 8 ஆம் தேதி திண்டுக்கல், மதுரை வழியே செல்லாது.
மேலும், திருச்சி - காரைக்குடி, மயிலாடுதுறை - செங்கோட்டை, கொச்சுவேலி - மங்களூரு, சென்னை - திருவனந்தபுரம், ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...