தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது

Published On :

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் ஏழை பெண் பங்க்திபென் படேல் கூறியதாவது:

"எங்கள் வீட்டில் நான்கு பேர் வசிக்கிறோம். வீட்டில் நான்கு பல்புகள், நான்கு மின்விசிறிகள், ஒரு ப்ரிட்ஜ் மற்றும் ஒரு டிவி என வீட்டில் குறைந்த அளவு மின்சாதனங்களே உள்ளது. வீட்டில் மூன்று பேர் நாள் முழுவதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவோம்."

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை வரும். இந்த முறை ஜூன் - ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வரும் நாங்கள் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது தொடர்பாக குஜராத் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் முறையான புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினர். பின்னர் இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் மதிப்பாய்வு செய்ததில் மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிம்மதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.