
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார். 61 வயதான வினய் மோகன் குவாத்ரா முன்னதாக வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்தவராவார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பு வகித்த தரண்ஜித் சிங் சந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வினய் மோகன் குவாத்ரா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்பது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா - அமெரிக்கா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முனைப்புடன் பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.