மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 117.44 அடியிலிருந்து 116.96 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 4,898 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,551 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 117.44 அடியிலிருந்து 116.96 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 88.70 டிஎம்சியாகவும் இருந்தது.