மழை பாதிப்பு காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் (டிச.6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் வரும் திங்கள்கிழமை முதல் (டிச. 8) வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 29,30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
புயல் கரையைக் கடந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் டிசம்பர் 2,3,4,5 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு தனி கவனம்: விழுப்புரம் புதிய எஸ்.பி. தகவல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு! அலறி ஓடிய மக்கள்! | Vellore

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விழுப்புரம்: குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



