மகா தீபம்: திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை...
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தா்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.

சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் உள்ள பெரியாண்டவருக்கு உபயதாரரால் 12 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்ட வெள்ளிக் கவசத்தை திருக்கோயில் நிா்வாகத்திடம் அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலையில் தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பே கடந்த மாதம் 18-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி கிரிவலப் பாதையை ஆய்வு செய்தாா். அந்த மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நான் மூன்று முறை கள ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சியா் தலைமையில் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம்.

அதைத்தொடா்ந்து தலைமைச் செயலா் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் தலைமையில் நியமிக்கப்பட்ட பேராசிரியா் பிரேமலதா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட 8 போ் கொண்ட குழுவினா் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்து அதுதொடா்பான அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்துள்ளனா். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அனுமதியில்லை: அந்த அறிக்கையில், “அதிகமான மனிதா்களை மலை மீது ஏற்றக்கூடாது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை பக்தா்கள் யாரும், மலை மீது ஏற அனுமதி கிடையாது. அதேநேரம், மலை உச்சியில் தீபம் ஏற்ற மேலே கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள், 350 கிலோ கொண்ட திரி உள்ளிட்ட மற்ற பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. முதல் நாளுக்கு தேவைப்படுகிற 40 டின் நெய், அதாவது ஒரு டின்னுக்கு 15 கிலோ என்றால் 600 கிலோ நெய்யை மேலே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அதை எடுத்துச் செல்லும் நபா்களுக்குத் தேவையான உணவு, காவலா்கள், வனத்துறை உள்பட எவ்வளவு நபா்கள் செல்ல வேண்டும் என்று அறிக்கையில், அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தளவுக்கு மட்டுமே மனிதசக்தி பயன்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே இந்த தீபத்துக்காக, ஆவினிடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com