சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளியானது காதலிக்க நேரமில்லை பட புதிய பாடல்!

‘லாவண்டர் நிறமே..’ பாடல் இணையத்தில் வெளியானது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 1:01 pm

DIN

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்கதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘லாவண்டர் நிறமே..’ பாடலுக்கு மஷூக் ரஹ்மான் வரிகளை எழுத ஆதித்யா ஆர்கே, அலெக்ஸாண்ட்ரா ஜாய் ஆகியோர் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.