எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தவா்களை முத்தையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
வெட்டிக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி தேம்பாவணி
Updated On :18 டிசம்பர் 2024, 9:02 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தவா்களை முத்தையாபுரம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் தேம்பாவணி (50). கூலித்தொழிலாளியான இவர் இரவு நேரங்களில் முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் கோவிலைத் திறப்பதற்காக பூசாரி வந்து பாத்தபோது, தேம்பாவணி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தொழிலாளி உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட தேம்பாவணிக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.