மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 800 கிலோ எடையில் "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

News image
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 800 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பம்.
Updated On :21 டிசம்பர் 2024, 5:33 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 800 கிலோ எடையில் "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாக்லெட் கிங்காங்கை புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

சுற்றுலா நகரமான புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் சாக்லெட் மூலம் தலைவர்களின் உருவம் செய்து அவ்வப்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

அந்தவகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் உருவங்களை சாக்லெட் கொண்டு தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் அலாவுதீன் பூதம் போன்ற சாக்லெட் சிலையும் தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 7.2 அடி உயரத்தில் 800 கிலோ சாக்லேட் கொண்டு "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பத்தை பிரம்மாண்டமாக தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனா்.

இது முழுக்க முழுக்க சாக்லெட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை செப் ராஜேந்திரன் தங்கராசு தயாரித்துள்ளார்.

இந்த சாக்லெட் "கிங்காங்" சிலையை புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிலர் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.