திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அனைத்து மக்களுக்கும் தலா ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும்: சி.வி. சண்முகம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

News image

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்காததை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நகராட்சித் திடல் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

Updated On :21 டிசம்பர் 2024, 12:59 pm IST

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் வலியுறுத்தினார்.

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்காததையும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததையும் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நகராட்சித் திடல் பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்று பேசியதாவது:

ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கும் மரக்காணம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கே இருந்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறி போட்டோசூட் எடுத்துக் கொண்டனர். ஆனால், பெரும் மழை பெய்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எந்த அமைச்சரும் முகாமிடவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விழுப்புரத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் தான் முதல்வர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தார். அப்படி வந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை. மக்களை சந்தித்து ஆறுதல் கூற வில்லை. மண்டபத்தில் தங்க வைத்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி விட்டுச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அப்படி அறிவித்த நிவாரணத் தொகையும் முழுமையாக வழங்கப்பட வில்லை.

மக்களவைத் தேர்தல் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2000 மட்டும் நிவாரணம் .

ஏன் இந்த பாகுபாடு?

விழுப்புரம் மாவட்ட மக்கள் மீது ஏன் இந்த பாகுபாடு காட்டுகிறது திமுக அரசு என கேள்வி எழுப்பிய சி.வி. சண்முகம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகையும், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அதுபோல பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் அர்ஜுனன், சக்கரபாணி, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.