மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

குடிசையில் தீப்பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசையில் தீப்பற்றியதில் 2 பேத்திகளுடன் முதியவர் ஒருவர் பலியானதை பற்றி..

கோப்புப்படம்

Published On :

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் தீப்பற்றியதில், தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிவப்புரி மாவட்டத்தில் நேற்று (டிச.21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்காக கொளுத்திய நெருப்பு குடிசையில் பற்றிக் கொண்டதில் அந்த குடிசையினுள் இருந்த ஹஜாரி பஞ்சரா (வயது-65) மற்றும் அவரது பேத்தி சந்தியா (10) ஆகிய இருவரும் பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிய அவரது மற்றொரு பேத்தியான அனுஷ்காவை (5) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானர்.

இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குளிர் காய்வதற்காக கொளுத்திய அடுப்பிலிருந்து பரவிய நெருப்பினால்தான் இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அரசின் சார்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவையும் அரசே ஏற்கும் என பைராடு பகுதி தாசில்தார் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.