அஸ்ஸாம் வெள்ளம்: 29 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on
Updated on
2 min read

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தர்ராங் மாவட்டத்தில் நிலைமை சீரடைந்து வருவதாகவும், அங்கு வெள்ளத்தால் 1.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 98 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தர்ராங் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அஸ்ஸாம் நீர்வளத்துறை அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்.

பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக ஹசாரிகா கூறினார்.

"இந்த முறை அஸ்ஸாமில் நான்கு கரைகள் உடைப்பு ஏற்பட்டது. ஆற்றங்கரையில், ஏராளமான உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது, அடுத்த 5 முதல் 7 நாட்களில், முந்தைய வெள்ளப்பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​அழிவுகள் குறைவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.நான்கு இடங்களில் மட்டுமே கரையோரம் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஹசாரிகா கூறினார்.

மேலும், இந்த ஆண்டு மாநிலத்தில் 220 கி.மீட்டர் புதிய மின்கம்பங்களை அரசு அமைக்க உள்ளது என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அஸ்ஸாமில் அணைக்கட்டு பகுதிகள் இருக்காது. முன்பு கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் நாங்கள் பராமரித்து வருகிறோம். அவ்வப்போது கரைகளை பலப்படுத்தி வருகிறோம்" என்றார் ஹசாரிகா.

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

பின்னர், பாஜக எம்பி திலீப் சைகியா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

"மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது மற்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளாார்," என்று அவர் கூறினார்.

"மாநிலத்தில் வெள்ளம் என்பது வழக்கமான நிகழ்வு தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் அளித்து வருகிறது. தர்ராங் மாவட்டத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று சைகியா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை கண்காணித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரிடம் வெள்ள பாதிப்பு குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீர்வளத்துறைக்கு ரூ.200-250 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் ரூ.2500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மிசாமரி சார், போரோச்சார், எகராச்சி சார், போக்மாரி, ஹதிபோரி, அல்கா சார், ஹட்டியலா சா, சட்டியாரா, தேகா சார், மற்றும் வார் சார் ஆகிய பகுதிகளில் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள், பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள சுமார் 15-20 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு நாட்டுப் படகுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன.

மாவட்டத்தில் 1609 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹதிபோரி சார் பகுதியில் வசிக்கும் முக்தர் அலி கூறுகையில், "மக்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்" என்றார்.

சுகுர் அலி, "தர்ராங் மாவட்டத்தில் ஆற்றுப் பகுதிகளில் வசிப்பவர்களில் 10,000-15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இன்னும் தண்ணீருக்குள் தான் வாழ்ந்துவருகின்றனர்" என்றார்.

தர்ராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தங்கள் வீடுகளை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com