முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் பிரபல தொடர்!

புதிய தொடர் வருகையால், பிரபல தொடரொன்று முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் பிரபல தொடர்!
Published on
Updated on
1 min read

புதிய தொடர் வருகையால், பிரபல தொடரொன்று முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரி தொடரின் முதல் பாகம் கடந்தாண்டு ஆகஸ்ட் வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடரின் முதல் பாகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.

கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையாக சுந்தரி தொடரின் முதல் பாகத்தில் ஒளிபரப்பானது.

இதனைத் தொடர்ந்து, ஐஏஎஸ் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியராக சுந்தரி(கேப்ரியல்லா) பொறுப்பேற்று அவர் சந்திக்கும் சவால்கள் இரண்டாம் பாகத்தின் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் பிரபல தொடர்!
மணமகளே வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

இந்த நிலையில், சுந்தரி தொடரின் டிஆர்பி புள்ளிகள் குறைந்து வருவதால், முக்கியத்துவம் பெறா(non prime) நேரத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரி - 2 தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், பகல் நேரத்துக்கு மாற்றப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சுந்தரி - 2 ஒளிபரப்பாகும் நேரத்தில் புதிய தொடரான ஆடுகளம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தொடரில் டெல்னா டேவிஸ் - சல்மான் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com