ஓடிடியில் கல்கி 2898 ஏடி எப்போது?
கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.