கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?

கல்கி ஏடியில் பிரபல நடிகை இணைந்ததாகத் தகவல்...
கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?
Updated on
1 min read

கல்கி ஏடி 2898 திரைப்படத்தின் புதிய கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், பிரபாஸ் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து, கல்கி - 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.

இந்த நிலையில், தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நடிகையாக கவனிக்கப்பட்டாலும் தற்போது ராமாயணம் படம் மூலம் பான் இந்திய நடிகையாக சாய் பல்லவி வளர்ந்துள்ளதால் இத்தேர்வு நிகழலாம் எனத் தெரிகிறது.

கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?
வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?
Summary

actor sai pallavi might act in kalki 2898 AD

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com