பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்கள்!

பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

கோப்புப்படம்

Published On :

நீடாமங்கலம்: பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் வரிவசூல் பணி முடிந்த பின்பு சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர், தூய்மைப் பணிக்கு வரவேண்டும் எனக்கோரி மற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் புதன்கிழமை அதிகாலை பேரூராட்சி அலுவலகம் வந்த போதும் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் சமாதனம் செய்ய முயன்றபோதும் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் தெருவுக்குச் சென்று வீடுகளின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால் நீடாமங்கலம் பேரூராட்சியில் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது

இந்த நிலையில், பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் ஆர்.ஆர்.ராம்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் பிறகு தூய்மைப் பணியாளர்கள் மூன்றரை மணி நேரம் கழித்து காலை 10.30 மணிக்குப்பிறகு பணிக்கு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.