மேட்டூர் அணை திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.
அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.69 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நாளை(ஜூலை 29) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











