சீன விசா மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்!

சீன விசா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
Published on
Updated on
1 min read

சீன விசா மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், அந்த பணிகள் முடிவதற்கு முன்னதாகவே சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது.

இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறைச் செயலா் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையில் 2-வது முறை கார்த்தி சிதம்பரம்!

இதையடுத்து அப்போது மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த நிறுவனத்தினர், 263 ஊழியர்களுக்கு விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத் தருமாறு தெரிவித்ததாகவும் அதற்காக 50 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

சிபிஐ புகாா் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்து, காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.

image-fallback
பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை மூன்றாவது முறையாக 9-ஆம் தேதி பதவி ஏற்பு

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு எதிராக சம்மன் அனுப்பியிருந்தது.

அதனை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான தனிப்பட்ட உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com