
மகாராஷ்ரத்தின் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாக்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஹிங்கனா காவல்நிலையத்துக்குள்பட்ட தாம்னா கிராமத்தில் உள்ள சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் பிற்பகல் 1 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திர சிங்கால் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.
வெடி விபத்து நிகழ்ந்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணிபுரிந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.