
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கால்நடை வாரச் சந்தைகளில் ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல, ஆடுகளை வாங்க பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகளும் இஸ்லாமியா்களும் சந்தையில் திரளுவதால் சந்தை களைக்கட்டி வருகிறது.
ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திம் மாநிலத்தில் இருந்தும் கூட வாகனங்கள் மூலம் 2 ஆயிரத்திற்கு அதிகமான ஆடுகள் கொண்டுவரப்பட்டு காலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை வியாபாரம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது
ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்றது
இதில், இறைச்சி கடைகளின் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி பிற சமுதாய மக்களும் ஆர்வத்துடன் வருகை தந்து ஆடுகளை வாங்கிச் சென்றதால் ஆடுகள் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கமான வாரங்களை காட்டிலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிகளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டு வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றதால் இந்த வாரச் சந்தையின் முடிவு நேரமான பிற்பகல் 12 30 மணிக்குள் சுமார் ரூ.4 கோடிக்கு மேலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.700-க்கு விற்பனையான 1 கிலோ ஆட்டுக்கறி, இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.