தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2024, 8:26 am

DIN

மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.

தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூா், சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோயில் நகரமான மதுரையில் இருந்து தொழில்நுட்ப நகரான பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மதுரை-பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் திண்டுக்கல், கரூா், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மதுரை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.