ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளச்சாராய மரணம் 54 ஆக உயர்வு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

News image

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :22 ஜூன் 2024, 5:55 am

Venkatesan

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பரமசிவம், கல்யாணசுந்தரம் ஆகியோர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தனர்

இதையடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதுவை கள்ளச்சாராயம் குடித்து இறந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.