திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: அரசுக்கு ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம்!

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக அரசுக்கு ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News image
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்).
Updated On :26 ஜூன் 2024, 1:20 pm

DIN

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக அரசுக்கு ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதங்கள் நடைபெற்றது.

இதற்கு பதில் அளித்து , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் சட்டப்பேரவையில் உரையாற்றினர். அப்போது அவர் தெரிவித்ததாவது:

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான ஒப்புதல் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, நம்முடைய முதலமைச்சர், இந்தத் திட்டத்திற்கான முழுச் செலவினத்தையும் நமது தமிழ்நாட்டின் சொந்த மாநில நிதியிலிருந்து மேற்கொண்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கான முழுச் செலவினத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்ற காரணத்தால், தமிழ்நாடு அரசிற்கு மிகக் கடுமையான நிதிச் சுமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தவொரு நியாயமற்ற செயலினால், மாநில அரசுக்கு இந்த வருடம் மட்டும் ஏறத்தாழ ரூ. 12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்த ஆண்டு நம்முடைய அரசு 12,000 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது. மத்திய அரசு, ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய வகையில் இத்திட்டத்திற்கான நிதியை வழங்கியிருக்குமேயானால், நம்முடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்குமேயானால், நியாயத்திற்கு செவிசாய்த்திருக்குமேயென்றல், இந்த ரூ. 12,000 கோடியை நாம் நம்முடைய சொந்த நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்கு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

உறுப்பினர்கள் எல்லோரும் பல்வேறு திட்டங்களை கேட்கிறீர்களே! நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன்; மாறாக இந்த ரூ. 12,000 கோடியை இந்தத் திட்டத்திற்காக செலவழிப்பதற்குப் பதிலாக அரசினுடைய மற்ற திட்டங்களுக்கெல்லாம் நாம் ஒதுக்கீடு செய்து செலவழிந்திருந்தால், அதன்மூலமாக 25,000 புதிய பேருந்துகளை நாம் வாங்கியிருக்கலாம்; நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியிருக்கக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்க முடியும். அதேபோன்று 30,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாம் கிராமச் சாலைகளை அமைத்து முடித்திருக்கலாம்.

நம்முடைய முதலமைச்சர், ரூ. 4,000 கோடி செலவில் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் என்றால், அந்த 10,000 கிலோ மீட்டர் சாலை என்பது 30,000 கிலோ மீட்டர் சாலையாக உயர்ந்து, நீங்கள் கேட்கக்கூடிய அத்தனை இடங்களிலும் சாலைகள் அமைக்கக்கூடிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க முடியும்.

அதேபோன்று 3½ இலட்சம் வீடுகளை நாம் புதிதாகக் கட்டியிருக்க முடியும். 50,000 புதிய வகுப்பறைகளை நம்முடைய பள்ளிகளிலே நாம் உருவாக்கியிருக்க முடியும். ஆக இந்த ரூ. 12,000 கோடியை நாம் இழந்திருக்கிறோமோமென்றால்; இல்லை, இத்தனை திட்டப் பணிகளையும் அதனுடன் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கும், இந்த அவைக்கும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன் என்று அமைச்சர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.