2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்குச் சென்றார்.
2 நாள் அரசுமுறைப் பயணமாக  பூடான் சென்றார் பிரதமர் மோடி!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்குச் சென்றார்.

கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும் பூடான் நாட்டுக்கு வருகை புரியுமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.

இதனைத் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின்கீழ் பூடான் நாட்டுக்கு பிரதமா் மோடி மாா்ச் 21, 22 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தாா்.

இந்த நிலையில் ‘பரோ நகர விமான நிலையம் அருகே மோசமான வானிலை நிலவுவதால் இருதரப்பினரின் பரஸ்பர ஒப்புதலோடு பிரதமரின் பூடான் நாட்டு அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாற்று தேதிகள் குறித்த அறிவிப்பு இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கூறியதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை பூடானுக்குச் சென்றார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"பூடான் பயணத்தின் போது, இந்தியா-பூடான் இருதரப்பு கூட்டுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்.பூடான் மன்னர், நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசுமுறைப் பயணமாக  பூடான் சென்றார் பிரதமர் மோடி!
நடுக்கடலில் பாக். கடலோரக் காவல் படையினருடன் மோதல்: 2 இந்திய மீனவா்கள் மாயம், பாகிஸ்தான் மாலுமி உயிரிழப்பு

மோடியை நாட்டிற்கு வரவேற்கும் விதமாக, பூடான் முழுவதும் சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடியின் கடைசி வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் தனித்துவமான மற்றும் முன்மாதிரியான இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் 1968 இல் நிறுவப்பட்டன, 1949 இல் கையெழுத்திடப்பட்ட நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமானது, பின்னர் பிப்ரவரி 2007 இல் புதுப்பிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக, உயர்மட்ட பரிமாற்றங்கள் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் இந்தியாவிற்கு பலமுறை வருகை செய்து, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவை சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கடைசியாக நவம்பர் 2023 இல் இந்தியாவிற்கு வருகை தந்தார்.

இதேபோல், ஆகஸ்ட் 2019 இல் பிரதமர் மோடியின் பூடான் பயணம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய இருதரப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

மார்ச் 2024 இல் பூடானின் பிரதமர்ஷெரிங் டோப்கேயின் சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியா வருகை, வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் துடிப்பான பொருளாதார உறவுகள் உள்பட பல்வேறு நிலைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com