
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த் 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதேபோன்று வானத்தைப் போல தொடரின் நாயகி தேப்ஜனி மொடாக் 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சின்னத்திரையைச் சேர்ந்த இரு பிரபலங்கள் இன்று ஒரேநாளில் பிறந்தநாள் கொண்டாடுவதால், சின்னத்திரை ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
சிறகடிக்க ஆசை தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் வசந்த் வென்றுள்ளார். இவர் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சிறகடிக்க ஆசை தொடரின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி வெற்றியின் பிறந்தநாளை குழுவினர் கொண்டாடினர்.
இதேபோன்று நடிகை தேப்ஜனி மொடாக் தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் தற்போது வானத்தைப் போல தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் நாக்கவுட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வங்கமொழித் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். வங்கமொழி ஆன்மிகத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
2019ம் ஆண்டு ராசாத்தி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.