மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
கொளத்தூர் பகுதியில்  சூறைக்காற்றுக்கு  சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் .
கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் .

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கதலி, செவ்வாழை, பூவன் போன்ற வாழை பயிரிட்டிருந்தனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைத்தாா்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன.

கொளத்தூர் பகுதியில்  சூறைக்காற்றுக்கு  சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் .
சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பலன் தரும் நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

மேலும் மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com