மே.வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

வேளாண் பூமியில் விவசாயத் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழப்பு
மே.வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்டா மாவட்டத்தின் புதியா பகுதியில் வேளாண் நிலத்தில் வேலை செய்த விவசாயத் தொழிலாளர்கள் நயன் ராய்(23), அவரது மனைவி பிரியங்கா(20) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.

அடினா பகுதியை சேர்ந்த ராஜ் ம்ரிதா, அசிட் சாஹா ஆகிய பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இருவர், தோட்டத்தில் இருந்து தங்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.

பாலுபூர் பகுதியில் வேளாண் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுமித்ரா மண்டல்(46) என்ற பெண்மணி மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இவர்களை தவிர்த்து, ராணா சேக்(8), சப்ருல் சேக்(11) ஆகிய இரு குழந்தைகள் உள்பட சந்தன் சாஹானி(40), மனோஜித் மோண்டல்(21), பங்கஜ் மோண்டல்(23), அடுல் மண்டல்(65) ஆகியோரும் மின்னல் தாக்கியதில் பலியாகினர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டோருக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com