
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதில் கட்டுமானத் தொழிலாளி சாந்தனன்(40) உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் கட்டடத் தொழிலாளி சாந்தனன் பரோட்டா சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுத்து வருவதற்குள் சுருண்டு விழுந்து மயங்கியுள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைத்து கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பரோட்டா சாப்பிடும்போது தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.