குமார் வேம்புவின் முதல் பார்ட்னர்ஸிடமிருந்து ரூ. 3.3 கோடி நிதி பெற்ற பான்ஹெம் வென்ச்சர்ஸ்!

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலான ஸ்டார்ட்அப் தமிழா நிகழ்ச்சிக்காக இந்த நிதியை பான்ஹெம் வென்ச்சர்ஸ் வாங்கியுள்ளது.
குமார் வேம்புவுடன் எல். ஹேமச்சந்திரன், ஆர். பாலச்சந்தர்
குமார் வேம்புவுடன் எல். ஹேமச்சந்திரன், ஆர். பாலச்சந்தர்
Published on
Updated on
2 min read

குமார் வேம்புவால் நிறுவப்பட்ட முதல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரூ. 3.3 கோடி நிதியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலான ஸ்டார்ட்அப் தமிழா நிகழ்ச்சிக்காக இந்த நிதியை பான்ஹெம் வென்ச்சர்ஸ் வாங்கியுள்ளது.

தொழில்நுட்ப துறையின் தலைவர்களுள் ஒருவரான குமார் வேம்புவால் சமீபத்தில் நிறுவப்பட்ட "முதல் பார்ட்னர்ஸ்" என்ற முதலீட்டு நிறுவனம் முதல்முறையாக பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் எல். ஹேமச்சந்திரன், ஆர். பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.

உறுதியான குறிக்கோள் உணர்வுகொண்ட அடுத்த தலைமுறை புத்தாக்குனர்களாகவும் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குனர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்து வளர்ச்சி காண செய்வதே இந்த முதலீட்டு நிறுவனத்தின் குறிக்கோளாகும்.

ஸ்டார்ட் அப் தமிழா நோக்கம்

பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தொடங்கியிருக்கும் பிரபல பிசினஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார்ட் அப் தமிழா, பல்வேறு தொழில் துறை தலைவர்களிடமிருந்து மூன்று சீசன்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான வாக்குறுதியை ஏற்கனவே பெற்றுள்ளது.

ஆரம்ப நிலையிலும் மற்றும் வளர்ச்சி நிலையிலும் இருக்கின்ற, தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இம்மாநில மக்கள் மற்றும் அதன் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டையும் முன்னெடுத்துச் செல்ல புதிய சிந்தனைகளை உருவாக்கி செயல்படுத்தவும் மற்றும் பிசினஸ் நிறுவனங்களை உருவாக்கவும் ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

முதல் பார்ட்னர்ஸ்- ஐ நிறுவியது குறித்து கருத்து தெரிவித்த குமார் வேம்பு,

"எதிர்காலத்திற்காக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்குவது என்ற தனித்துவ நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் பான்ஹெம் குறிக்கோள் என்னை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான பான்ஹெம்-ன் அறிவியல் ரீதியிலான அணுகுமுறை சிறப்பானது, இந்தப் புதுமையான முயற்சியில் முதலில் இணையும் நபராக இருப்பது என்று நான் முடிவு செய்தது இந்த காரணத்திற்காகவே; முதல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் நிறுவப்படுவதற்கு இதுவே வழிவகுத்தது." என்று குறிப்பிட்டார்.

பான்ஹெம் நிறுவனர்களான எல். ஹேமச்சந்திரன், ஆர். பாலச்சந்தர் இது தொடர்பாக கூறியதாவது:

"தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு நிதி ஆதரவு என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

இத்தகைய தொழில்முனைவோர்கள், அவர்களது திறன்களை வெளிப்படுத்தவும், அவர்களது சிந்தனைகளை வெற்றிகரமான தொழில் நிறுவனங்களாக மாற்றவும் உதவுவதற்கு நம்பகமான ஆதார வளமாக இருப்பதே பான்ஹெம் உடைய செயல்திட்டமாக இருக்கிறது.

குமார் வேம்பு, முதலீட்டாளர்களாக எங்களோடு இணைந்திருப்பது எமது செயல்திட்டத்தை இன்னும் அதிக ஆழமானதாகவும் மாற்றியுள்ளது.

தொழில் முனைவோர்களின் கனவுகளை நிஜமாக்குவதற்கு உதவவும், இம்மாநிலத்தில் நிலைத்து நீடிக்கும் தொழில்முனைவு கலாசாரத்தை இன்னும் மேம்படுத்தவும் நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்" என இருவரும் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.