ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வயநாட்டில் வெல்லப்போவது யார்?: பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று முன்னிலை

பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News image

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி

Updated On :23 நவம்பர் 2024, 9:03 am IST

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிபெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவா் ராஜிநாமா செய்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அந்த கட்சி களமிறக்கியது.

ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் முக்கியப் போட்டியாளர்கள் உள்பட 16 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்த தொகுதியில் கடந்த நவம்பா் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அன்றைய தினம், ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இந்த இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.