சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக குறைந்து விற்பனையானது. நேற்று(நவ. 26) தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கும், சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 56,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 27) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,105-க்கும், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.56,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி மாதம் வரை தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்று தங்கம் விலை ஏற்ற- இறக்கம் குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.