ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.
இவ்விரு இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபையில் இன்று நடைபெறுகிறது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பூஜா வஸ்த்ரகருக்குப் பதிலாக சஜீவன் சஜனா சேர்க்கப்பட்டுள்ளார். நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா முன்னேற பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
அதேசமயம் பாகிஸ்தானை வென்றால் தான் நாக் அவுட் சுற்றை நினைத்து பாா்க்க முடியும் என்பதால், வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா ஆடவுள்ளது.
இரு அணிகளும் இதற்கு முன் நேரு நோ் மோதிய 15 ஆட்டங்களில் இந்தியா 12-இல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.