இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: குடிநீர் வினியோகம் பாதிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீருக்கு அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

News image

மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்.

Updated On :11 அக்டோபர் 2024, 10:56 am IST

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீருக்கு அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியிலிருந்து காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு காவிரி நீர் எடுக்கப்படுகிறது. தொட்டில் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை தொட்டில்பட்டி பிரிவு சாலை அருகில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில் பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேட்டூர்- சேலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வினியோக மின் மோட்டார்களை நிறுத்திய பிறகு குடி நீர் வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.

குழாய் உடைப்பு காரணமாக மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தரமற்ற குழாய்களை பொருத்துவதாலும் தரமற்ற பொருள்களை கொண்டு பழுது நீக்குவதாலும் அடிக்கடி இதே பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதால் புதிய குழாய் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.