மழை பாதிப்பை அரசியலாக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மழை பாதிப்பை அரசியலாக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மைப் பணியார்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவினை முதல்வர் ஸ்டாலின் பரிமாறினார்.









