எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்.

News image
பியூஷ் கோயல் - (கோப்புப் படம்)
Updated On :18 அக்டோபர் 2024, 2:56 pm

DIN

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து புதுதில்லியில் அவர் தெரிவித்தாவது:

தற்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது மற்றும் நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து வருகிறது. இதனால் முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் சிஸ்கோ தலைவர் ஜான் சேம்பர்ஸ் தன்னிடம் முதலீட்டுக்காக 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்ளதாகவும், அதனை முதலீடு செய்ய இந்தியாவை விட வேறு சிறந்த இடம் இல்லை என்றார்.

இதனிடையில் உலகம் இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாக உற்று நோக்குகிறது என்றும் ஜான் சேம்பர்ஸ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.