சிறைகளில் 84 பிரபல ரௌடிகளை 1987 முறை சந்தித்த 396 வழக்குரைஞர்கள்!

சிறைகளில் ரௌடிகளை சந்திக்கும் வழக்குரைஞர்கள்.
சிறை (கோப்புப்படம்)
சிறை (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 பிரபல ரெளடிகளை 396 வழக்குரைஞர்கள் 1987 முறை சந்தித்தத்தாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் ஆபத்தான சூழ்நிலை குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒருசில வழக்குரைஞர்கள் தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தி குற்றவாளிகளுடன் நெருக்கமாக பழகுவது மற்றும் கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கடந்த அக். 14 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் சங்கர் ஜிவால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை tndgpcrimewing4@gmail.com என்ற மின்னஞ்சள் முகவரிக்கு அக். 17-க்குள் அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரெளடிகளை ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை 546 வழக்குரைஞர்கள் சந்தித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மூத்த காவல் துறை ஒருவர் கூறுகையில், "வழக்குரைஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை சந்திக்கலாம், ஆனால் அதற்கு சில நடைமுறைகளைகளை வழக்குரைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

கைதியின் வருகைபதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வழக்குரைஞர்கள் மட்டுமே கண்காணிப்பாளரின் முறையான சரிபார்ப்புக்குப் பிறகு சிறையில் உள்ளவர்களை சந்திக்க முடியும்" என்று தெரிவித்தார்.

"நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் கைதிகளுடன், வழக்குரைஞர்கள் சந்திப்பு நிகழ்கிறது. நேர்மையான வழக்குரைஞர்களைத் தவிர, மற்றவர்களை தீவரமாக கண்காணிக்கும்மாறு சிறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சதித்திட்டங்களை தீட்டுவதற்காகவும், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை வழங்குவதற்காகவும் ஒரு சில வழக்குரைஞர்கள் ரெளடிகளை சந்திப்பதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com