ஆளுநர் விழாவில் சரியாகப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து (விடியோ)
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது.


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது நாட்டுப்பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்துநின்று பாடினர்.
ஆளுநரும் நாட்டுப்பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் முழுமையாக உச்சரித்துப் பாடினார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!
முன்னதாக, சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) 'ஹிந்தி மாத' கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வரி பாடப்படவில்லை. இதில் 'திராவிடம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...