டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம்.

News image
போக்குவரத்து மாற்றம் (கோப்புப்படம்)- DIN
Updated On :20 அக்டோபர் 2024, 8:01 am

DIN

காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் சென்னையில் நாளை(அக். 21) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி, நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால், கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது,

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

* MRTS X R.K.Salai Jn-ஐ தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை - காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து(21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் - மியூசிக் அகாதெமி பாயின்ட் - TTK சாலை - இந்தியன் வங்கி Jn - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - GRH பாயின்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* கதீட்ரல் ரோடு லைட் ஹைவுஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து (27 D) V.M. தெருவில் திருப்பிவிடப்பட்டு - லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - D' ஸ்லிவா சாலை - பக்தவச்சலம் சாலை - Dr. ரங்கா சாலை - பீமனா கார்டன் jn - CP ராமசாமி சாலை - சீனிவாசன் தெரு - RK மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.