
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது
சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலா்(காா்டு), பயணச்சீட்டு பரிசோதகா், ஏசி பெட்டி பணியாளா்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலா் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சோ்ந்த 30 ரயில்வே அலுவலா்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சாா்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க: புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலில் நவ.28-இல் குடமுழுக்கு!
சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது
இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல் என்ற பிரிவை இவ்வழக்கில் ரயில்வே போலீஸார் சேர்த்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.