புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!

ரஞ்சனி தொடர் அறிவிப்பு தொடர்பாக...
புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!
Published on
Updated on
1 min read

புது வசந்தம் பட பாணியில் உருவாகியுள்ள புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான கதைக்களம் என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. தற்போது இளம் தலைமுறையினரும் தொடர்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

இதனிடையே, இனியா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனால், சன் தொலைக்காட்சி புதிய தொடர்களை களமிறமிக்கி வருகிறது.

முன்னதாக ஆடுகளம் தொடரின் முன்னோட்டக்காட்சி வெளியானது. தொடர்ந்து, அயலி இணையத் தொடர் பிரபலம் அபி நட்சத்திரா மற்றும் கனா காணும் காலங்கள் தொடர் பிரபலம் பரத் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் மூன்று முடிச்சு என்ற புதிய தொடரும், சில நாள்களுக்கு முன்பு புனிதா என்ற தொடரும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சனி என்ற புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. ரஞ்சனி சீரியல் நட்பின் இலக்கணத்தைக் கூறும் தொடராக எடுக்கப்படுகிறது.

புதுமுகங்கள் நடித்துள்ள இத்தொடர், 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே தொடரின் மையக்கரு. விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

தற்போது உள்ள சூழலில், குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் தொடராக எடுக்கப்பட்டு வரும் நிலையில், நண்பர்கள் குறித்த கதை என்பதால் இளம் தலைமுறையினரையும் இத்தொடர் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஞ்சனி தொடர் தொடங்கப்படும் தேதி மற்றும் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com