திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு... 35 மாணவர்கள் மயக்கம்!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் 35 மாணவர்கள் மயக்கம்.
hospital
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்.Din
Published on
Updated on
1 min read

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் சுமார் 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும் , மேற்பட்ட மாணவர்கள் மயங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவசர கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஒரு சில மாணவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 மாணவிகளை, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com